ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் தொடர் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

ஆந்திரப் பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரபிக் கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுத்தப்படுகின்றனர். தற்போது மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  

கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் நாளை முதல் மழை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. 

இது தவிர வடக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது" என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP