ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழைக்கு 25 பேர் பலி!

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், புயல் மற்றும் தொடர் மழை காரணமாக 25 பேர் பலியாகியுளளனர்.
 | 

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழைக்கு 25 பேர் பலி!

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், புயல் மற்றும் தொடர் மழை காரணமாக 25 பேர் பலியாகியுளளனர். 

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று புயல் எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி, ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழையும் பெய்தது. இதனால் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த புயல், மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இதேபோன்று மத்தியபிரதேசத்தில் புயல் மழையில் சிக்கி, இன்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களையும் சேர்த்து, 16 பேர் பலியாகியுள்ளனர். 

இது தொடர்பாக பிரதமர் மோடி, "மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும்" என்றும் பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP