கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 | 

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் 13 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், வங்ககடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யா வாய்ப்புள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் இன்று முதல் 8ம் தேதி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 6ம் தேதி பத்தனம் திட்டா, இடுக்கி, மலப்புரம், வயநாடு, காசர்கோடு மாவட்டங்களுக்கும்,7ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP