பைக், கார் வைத்திருக்கிறீர்களா?- உங்களுக்கு அடுத்த அடி

டிஜிட்டலாக பெட்ரோல் பங்கில் பணம் செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 0.75 சதவீத சலுகை தற்போது 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 | 

பைக், கார் வைத்திருக்கிறீர்களா?- உங்களுக்கு அடுத்த அடி

பெட்ரேல் பங்க்கில் டிஜிட்டலாக பணம் செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் சலுகையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

பெட்ரோல் பங்கில் டெபிட் கார்ட் மற்றும் கிரேடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த திட்டம் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அமலுக்கு வந்தது. இதற்காக எச்.பி.சி.எல், இந்தியன் ஆயில் மற்றும் பி.பி.சி.எல் போன்ற எண்ணெய் நிறுவனங்களுடன் வங்கிகள் ஒப்பந்தம் போட்டுள்ளன. 

இதுவரை டிஜிட்டலாக பணம் செலுத்துபவர்களுக்கு 0.75 சதவீதம் வரை பணம் திரும்பப் பெறும் சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆன்லைன், டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது 0.25 சதவீதமாக குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இதுகுறித்து பெட்ரோல் பங்க் அலுவலர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது. 

பெட்ரோலுக்கு தோராயமாக லிட்டருக்கு 57 காசுகளும் டீசலுக்கு லிட்டருக்கு 50 காசுகளும் திரும்ப வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆன நிலையில் தற்போது இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP