குஜராத்தில் சாலையில் ஜாலியாக வலம் வரும் சிங்கங்கள்! வைரல் வீடியோ

குஜராத்தில் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள சிங்கங்கள், ஜூனாகத் காட்டில் உள்ள நகர சாலையில் ஜாலியாக உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 | 

குஜராத்தில் சாலையில் ஜாலியாக வலம் வரும் சிங்கங்கள்! வைரல் வீடியோ

குஜராத்தில் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள சிங்கங்கள்,  ஜூனாகத் நகர சாலையில் ஜாலியாக உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத்தில் சவுராஷ்டிரா பகுதியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஜூனாகத் நகரம், கிர்னார் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இதில் 40 க்கும் மேற்பட்ட ஆசிய சிங்கங்கள் உள்ளன.

சிங்கங்கள் பெரும்பாலும் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வெளியே வந்து அருகே உள்ள சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இது இங்கே ஒரு இயற்கை நிகழ்வாக பார்க்கப்டுகிறது. அவை இரவில் மட்டுமே வெளியே வந்து மீண்டும் காட்டுக்குத் திரும்புகின்றன.

மேலும். மனித - வனவிலங்கு மோதல்களைத் தவிர்ப்பதற்காக வன விலங்குகளை மீட்டு அவற்றை மீண்டும் காட்டுக்கு விடுவிக்கிறது. மற்ற விலங்குகளுக்கு ஒரு பாதுகாப்பு அரண் போல இருப்பதாக அங்குள்ள வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலயத்திலும் அதைச் சுற்றியும் 523 சிங்கங்கள் இருந்தன. மொத்தம் 523 சிங்கங்களில் 33 கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தில் பதிவாகியுள்ளன. கிர்னார் வனவிலங்கு சரணாலயம் மற்றும் அதனைச் சுற்றியும் சுமார் 35 முதல் 40 சிங்கங்கள் உள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP