குஜராத்: விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 6 பேர் பலி!

குஜராத்தில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் ஹடோல் என்ற கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்தக் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஆற்றில் கரைக்கச் சென்ற போது சிலையை கரைத்துவிட்டு அங்கு சிலர் குளித்தனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்களை தண்ணீர் அடித்து சென்றது. இதில், 6 பேரும் சம்பவ இடத்திலேயே நீருக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு சிலர் காணாமல் போனதாக அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP