குஜராத்:  படிக்கப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரக் கடைகளில் வேலை பார்த்த கோடீஸ்வர பையன்!!!

குஜராத் மாநிலத்தில், தனது கல்லூரி படிப்பை தொடர பிடிக்காத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறிய 19 வயது இளைஞனை, சிம்லாவில் உள்ள ஓர் ஹோட்டல் முதலாளியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர் குஜராத் போலீசார்.
 | 

குஜராத்:  படிக்கப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரக் கடைகளில் வேலை பார்த்த கோடீஸ்வர பையன்!!!

குஜராத் மாநிலத்தில், தனது கல்லூரி படிப்பை தொடர பிடிக்காத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறிய 19 வயது இளைஞனை, சிம்லாவில் உள்ள ஓர் ஹோட்டல் முதலாளியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர் குஜராத் போலீசார்.

குஜராத் மாநில வதோதரா நகரை சேர்ந்தவர் தாக்கர். இவரது 19 வயது மகன் துவாரகேஷ் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார். எப்போதும் போல கல்லூரிக்கு செல்வதாக கூறி கிளம்பி சென்ற துவாரகேஷ் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பாத காரணத்தினால், அச்சமடைந்த அவரது பெற்றோர் குஜராத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார், துவாரகேஷ் எங்கு சென்றிருக்கக்கூடும் என்பது குறித்த எந்த க்ளூவும் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், இமாச்சலபிரதேச ஷிம்லா நகரின் ஓர் ஹோட்டல் முதலாளியிடமிருந்து, குஜராத்தின் பத்ரா பகுதி காவல் நிலையத்திற்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. 

அந்த அழைப்பை தொடர்ந்து, துவாரகேஷ் ஷிம்லாவில் உள்ளதை அறிந்து கொண்ட குஜராத் போலீசார், உடனடியாக அங்கு சென்று, துவாரகேஷை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து துவராகேஷ் கூறுகையில், கல்லூரி படிப்பு பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி, ரயில் மூலம் ஷிம்லா சென்றிரங்கியதாகவும், கையில் காசு இல்லாத காரணத்தினால், ரோட்டு கடைகளில் வேலை செய்து உண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். 

மேலும், அப்படி ஓர் ஹோட்டலில் வேலை கேட்டு சென்றபோது தான், அதன் முதலாளி தன்னுடைய கல்லூரி ஐடி கார்டு மூலம் தனது இருப்பிடத்தை கண்டு கொண்டு போலீசாருக்கு தகவல் அளித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும், இவரை காணாமல் தவித்து வந்த இவரது பெற்றோர், தற்போது மகனை திரும்பவும் கண்டது மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாக கூறியுள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP