அரபிக் கடலில் உருவானது ‘மகா’ புயல்: கனமழைக்கு வாய்ப்பு;மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடலை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகவும், இந்த புயலுக்கு ‘மகா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

இதுதொடர்பாக வானிலை மையத்தின் அறிவிப்பில் மேலும், ‘லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மகா’புயல் நாளை தீவிர புயலாக மாறும். திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ., மேற்கு வடமேற்கு திசையில் நிலைகொண்டுள்ள இந்த புயல், லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. மகா புயலால் காற்றின் வேகம் 95 கிலோ மீட்டரில் இருந்து 110 கிலோ மீட்டராக இருக்கும்’ என்று கூறியுள்ளது.

மேலும், மகா புயலால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இரவு மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, அரியலூர், கோவை, நீலகிரி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கேரளா மற்றும் கர்நாடகா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நாளை செல்ல வேண்டாம் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP