நிலச்சரிவில் புதைந்த உடல்களை கண்டுபிடிக்கும் ஜி.பி.ஆர் ரேடார்கள்!

கேரளாவில் நிலச்சரிவில் புதைந்த உடல்களை கண்டுபிடிக்க ஜி.பி.ஆர் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 | 

நிலச்சரிவில் புதைந்த உடல்களை கண்டுபிடிக்கும் ஜி.பி.ஆர் ரேடார்கள்!

கேரளாவில் நிலச்சரிவில் புதைந்த உடல்களை கண்டுபிடிக்க ஜி.பி.ஆர் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பாரா மற்றும் வயநாடு மாவட்டத்தில் உள்ள உடுமாலா ஆகிய இரண்டு இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் இரண்டு கிராமமே மூழ்கியுள்ளது. 

இந்தப் பகுதியில் மக்களை மீட்கும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பெரும்பாலோனோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது இவ்விரு இடங்களில் மட்டும் உயிர்ப்பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் பலரை காணவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

நிலச்சரிவில் புதைந்த உடல்களை கண்டுபிடிக்கும் ஜி.பி.ஆர் ரேடார்கள்!

இதை அடுத்து நிலச்சரிவில் சிக்கிய உடல்களை கண்டுபிடிக்க ஜி.பி.ஆர் ரேடார் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் கேரள போலீசார் உள்ளிட்ட 150 பேர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP