7 பேர் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது: கே.எஸ்.அழகிரி

ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 | 

7 பேர் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது: கே.எஸ்.அழகிரி

 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து, ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே இறுதி முடிவு எடுப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்து, வழக்கை தள்ளபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 7 பரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக அரசு ஆளுநருக்கு இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவர் சட்டப்படி தனது முடிவெடுக்க வேண்டும். 7 பேரை விடுதலை செய்வதில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது நிலைப்பாட்டை அறிவித்து விட்டது" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP