கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கெடு!

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, இன்று மீண்டும் கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா காலக்கெடு விதித்துள்ளார்.
 | 

கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கெடு!

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு மீண்டும், ஆளுநர் வஜூபாய் வாலா காலக்கெடு விதித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமியின் ஆட்சியின் மீது, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நாள் முழுவதும் நடைபெற்றது.

நேற்று அவை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், வேண்டுமென்றே நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் தாமதப்படுத்துவதாக பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று(ஜூலை 19) பிற்பகல் 1.30 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியிருந்தார். ஆனால், இன்றும் சட்டப்பேரவையில் காலை முதல் விவாதம் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஆளுநர் விதித்த காலக்கெடு முடிந்த நிலையிலும் கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

இதையடுத்து ஆளுநர் வஜூபாய் வாலா, மீண்டும் கர்நாடக முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் கடிதத்தில், "குமாரசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்தவே விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது" என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆளுநர் காலக்கெடு விதித்துள்ளதால், இன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP