ஏழைகள் நலனில் அக்கறை செலுத்தும் அரசு: ஜனாதிபதி பாராட்டு

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைக்கும் வகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், லோக்சபா, ராஜ்யபசா எம்.பி.,க்களின் கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றி வருகிறார். இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்றுள்ளார்.
 | 

ஏழைகள் நலனில் அக்கறை செலுத்தும் அரசு: ஜனாதிபதி பாராட்டு

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைக்கும் வகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், லோக்சபா, ராஜ்யபசா எம்.பி.,க்களின் கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றி வருகிறார். இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்றுள்ளார். 

இன்று காலை தனது உரையை துவங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பார்லிமென்ட்டில் பேசியதாவது: 

''விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2014ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின், மத்தியில் பொறுப்பேற்ற புதிய அரசு, புதிய இந்தியாவை உருவாக்க, ப நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக பெண்கள் நலன், ஆரோக்கியம், கல்வி, சுகாதாரம், அடிப்படை தேவைகள், விவசாயிகள் நலன் உள்ளிட்ட பல்வற்றில் அக்கறை செலுத்தி வருகிறது. அதற்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 

உஜ்வாலா திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம், நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் பலன் அடைந்துள்ளனர். 

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 21 கோடி பேர் நேரடியாக பலன் அடைந்துள்ளனர். நாட்டு மக்களுக்கு, உலகத் தரத்திலான மருத்துவ வசதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது.

அனைவருக்கும் வீடு என்ற இலக்கை, 2022க்குள் எட்ட, இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதே, மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது. 

துாய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவது பெருமை அளிக்கிறது. காந்திய கொள்கைகளை பின்பற்றும் நாடாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

மத்தியில் ஆளும் இந்த அரசு, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 

மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால், 4 மாதங்களில் 10 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர். 

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழைகள், விவசாயிகள் நலனிலும், இந்த அரசு அக்கறை செலுத்தி வருகிறது. 

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஏழை மக்களுக்கும், உயர் தரமான சிறந்த சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது''

இவ்வாறு, ஜனாதிபதி தொடர்ந்து பேசி வருகிறார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP