அழைப்பிற்கு கட்டணம் வசூலிக்கும் ஜியோ !

வேறு நெட்வொர்க் எண்ணிற்கு கால் செய்தால் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
 | 

அழைப்பிற்கு கட்டணம் வசூலிக்கும் ஜியோ !

ரிலையன்ஸ் நிறுவனத்தால் சில வருடங்களுக்கு  முன்னர் பலத்த சலுகைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது ஜியோ  நெட்வொர்க் .  அதிக டேட்டா, அன்லிமிட்டட் கால்கள் என பல கொடுத்த ஜியோவால் பல நெட்வொர்க் கம்பனிகள் கலியாகின என்றே சொல்லாம்.

அனைத்து தரப்பினருக்கும் ஏற்றார் போல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்த ஜியோ. அந்த சலுகைகளை மெல்ல மெல்ல குறைத்து வருவதாக தெரிகிறது. அதன்படி கட்டணமின்றி எந்த நெட்வொர்க் எண்ணிற்கும் பேசலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்  என கொடுக்கப்பட்ட அன்லிமிட்டட் சலுகையில் திருத்தம் செய்யப்ட்டுள்ளதாம்.

அதாவது வேறு நெட்வொர்க் எண்ணிற்கு கால் செய்தால் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கால் செய்வதற்கு என இனி 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தனியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும் , அதற்கு பதில் கூடுதலாக இலவச டேட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP