துண்டு பிரசுரம் விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு சவால் விட்ட கவுதம் கம்பீர்!

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்கத் தயார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், அவர்கள் நிரூபிக்க முடியாவிட்டால் கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று சவால் விட்டுள்ளார்.
 | 

துண்டு பிரசுரம் விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு சவால் விட்ட கவுதம் கம்பீர்!

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்கத் தயார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில், டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அதிஷியை கேவலமான முறையில் விமர்சித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் கம்பீர் சார்பாக விநியோகிக்கப்பட்டதாக  ஆம் ஆத்மி கட்சியினர் குற்றஞ்சாட்டினர். 

இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதற்கு உரிய அளிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

ஆனால், கவுதம் கம்பீர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் மீதான குற்றச்சாட்டை ஆம்ஆத்மி கட்சியினர் நிரூபித்தால், நான் பொது இடத்தில் தூக்கில் தொங்கத் தயார். அதே சமயத்தில், அவர்கள் நிரூபிக்க முடியாவிட்டால் கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று சவால் விட்டுள்ளார். 

இதனிடேயை ஆம் ஆத்மி கட்சியில் கன்வீனராக பதவி வகித்து வரும் கரீம் என்பவருக்குச் சொந்தமான அச்சகத்தில், அக்கட்சியின் டெல்லி கிழக்கு தொகுதி வேட்பாளர் அதிஷ் குறித்தான ஆபாச நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது சுரேஷ் என்பவர் அவரது கன்னத்தில் அரைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இருந்தபோதிலும் ஆம் ஆத்மி கட்சி சார்பாக சுரேஷ் மீது எவ்வித புகாரும் போலீசாரிடம் அளிக்கப்படவில்லை.

அதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டங்களை ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் அக்கட்சியின் பொறுப்பாளராக சுரேஷ் இருந்து வருவதும், அவர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்ட படங்களும் வெளியாகி அக்கட்சி டெல்லி மக்களிடையே அசிங்கப்பட்டது நாடறிந்த செய்தியாகிப்போனது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP