5 ஆண்டுகள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் கௌரி லங்கேஷ்!

கன்னட பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில், சிறப்பு விசாரணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதில் கோவாவை சேர்ந்த சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் விலங்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

5 ஆண்டுகள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் கௌரி லங்கேஷ்!

கன்னட பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில், சிறப்பு விசாரணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதில் கோவாவை சேர்ந்த சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் விலங்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தின் வாசலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு கமிட்டி அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது கர்நாடக அரசு. நேற்று புனே நீதிமன்றத்தில் சிறப்பு கமிட்டி 9235 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் சனதன் சன்ஸ்தா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கௌரி லங்கேஷை திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

எந்த சொந்த காரணத்திற்காகவும் அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்கள் இந்த கொலை திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனதன் சன்ஸ்தா மற்றும் அதற்கு நெருக்கமான இந்து ஜன் ஜகுர்தி சமிதியை சேர்ந்த உறுப்பினர்கள், பலரை கொலை செய்ய திட்டமிட்டு வந்ததாகவும், அந்த பட்டியலில், 2வது இடத்தில பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

"கொலையாளிக்கும், கொலை செய்யப்பட்டவருக்கும் இடையே எந்த சொந்த விருப்பு வெறுப்பும் இல்லை. ஏன் கொலை செய்யப்பட்டார்? ஏனென்றால், அவர் வேறு ஒரு சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் அதை பற்றி எழுதி வந்தார். இது ஒரு சித்தாந்தம், ஒரு அமைப்பை பற்றியதாகும்" என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் பாலன் கூறியிருந்தார்.

இதுவரை 18 பேர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அதில் துப்பாக்கியால் சுட்ட பரசுராம் வக்மாரே, கொலையை திட்டமிட்ட அமோல் காலே, சுஜித் குமார், அமித் டெக்வேகர் உள்ளிட்டோர் அடங்குவர். 

இதே கும்பல் தான், எம் எம் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே ஆகிய சர்ச்சைக்குரிய சிந்தனையாளர்களை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP