கங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு

வாரணாசியில் நடைபெறும் "கங்கா ஆரத்தி" வழிப்பாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பங்கேற்றார். தினந்தோறும் மாலை வேளையில், சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு, கங்கை நதிக்கு ஆரத்தி பூஜை நடத்தப்படுவது வாரணாசியில் வழக்கமான நிகழ்வாகும்.
 | 

கங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் "கங்கா ஆரத்தி" வழிப்பாட்டில் பிரதமர்  நரேந்திர மோடி இன்று மாலை பங்கேற்றார்.

தினந்தோறும் மாலை வேளையில், சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு, கங்கை நதிக்கு ஆரத்தி பூஜை நடத்தப்படுவது வாரணாசியில் வழக்கமான வழிப்பாட்டு நிகழ்வாகும்.
கங்கை நதிக்கரையில் நடைபெறும் இந்த வழிப்பாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பக்தி பரவசத்துடன் பங்கேற்றார். 

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டே உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனையொட்டி, கங்கை நதிக்கரை முழுவதும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது.

முன்னதாக, மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று மாலை அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்றார். இப்பேரணியில் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP