சந்திரயானை பெருமைப்படுத்திய லால்பாக் ராஜா கணபதி

சந்திரயான் 2 திட்டம் வெற்றிபெற்றதை குறிக்கும் வகையில், மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக் கணபதி மண்டல் இந்த ஆண்டு விண்வெளி வீரர்கள், கிரகங்களின் பின்னணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 | 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆண்டுதோறும் லால்பாக் கணபதி மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் 10 நாட்களும் இந்த மண்டலில் கணபதியை காண ஏராளமானோர் வருகை புரிவர்.

கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் இந்த பிள்ளையாருக்கு காணிக்கையாக கிடைக்கும். பல கோடிரூபாய் உண்டியல் வருவாயும் வரும். அந்த அளவு பிரசித்தி பெற்ற இந்த பிள்ளையார், இந்திய விஞ்ஞானிகளை பெருமைப்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளார். 

சந்திரயான் 2 திட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், லால்பாக் கணபதி மண்டல் இந்த ஆண்டு விண்வெளி வீரர்கள், கிரகங்களின் பின்னணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று தரிசித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP