கதர் பொருட்கள் உலகமயமாக்கப்படும்: நிதின் கட்கரி 

கதர் பொருட்கள் உலகமயமாக்கப்படும் எனவும், வரும் 5 ஆண்டுகளில், 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 | 

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரியாக நிதின் கட்கரி, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நெடுஞ்சாலை துறைக்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளபடி, வரும் 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவற்றில் 22 பசுமை வழிச்சாலைகளும் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும், 20 முதல் 25 நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக ஆய்வில் தெரியவந்ததையடுத்து, அவற்றை 100 நாட்களில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கதர் பொருட்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினரின் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை கூட்டு முயற்சியின் மூலம் உலகமயமாக்குவதே தனது இலக்கு எனவும், பெரிய அளவில் தேன் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP