தீவிரவாதத்துக்கு நிதியுதவி - காஷ்மீர் தொழிலதிபரின் ரூ.6 கோடி சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், தொழிலதிபருடைய ரூ.6.19 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
 | 

பாகிஸ்தானில் உள்ள நிதி ஆதாரங்கள் மூலமாகவும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நேரடியாக பணம் பெறுவதன் மூலமாகவும், நிதியை திரட்டி தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கும் உதவியதாக ஜஹூர் அஹமது வடாலி என்ற தொழிலதிபர் மீதும், ஹூரியத் அமைப்பின் தலைவர்கள் சிலர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. 

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த அமலாக்கத்துறையினர், அஹமது வடாலி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் இதர சொத்துகளை முடக்கி வைத்துள்ளனர். முன்னதாக, லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சையது தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியபோது அஹமது வடாலி குறித்த தகவல்கள் தெரியவந்தன.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP