ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு இலவச பயிற்சி: கர்நாடகாவில் ஓர் நிஜ ஹீரோ 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு தன் சொந்த செலவில் தினமும் பயிற்சி அளித்து வருகிறார்.
 | 

கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர், கிஷோர் குமார். இந்திய ராணுவத்தில், 18 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், அப்பகுதி இளைஞர்களுக்கு, தேசபக்தி, தேச சேவை பற்றி அறிவுரை வழங்குவதுடன், ராணுவத்தில் சேருவதற்கான வழிமுறையும், அதற்கான பயிற்சியையும் அளித்து வருகிறார். அதுவும், முற்றிலும் இலவசமாக.

ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு இலவச பயிற்சி: கர்நாடகாவில் ஓர் நிஜ ஹீரோ 

அவரிடம், தினமும், 80 இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உடல் திறன் பயிற்சி மட்டுமல்லாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற எவ்வகை பாடதிட்டத்தை படிக்க வேண்டும் என்பது குறித்தும் பாடம் நடத்தி வருகிறார். இது குறித்து கிஷோர் கூறுகையில், ‛‛இன்றைய இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர ஆர்வம் இருப்பினும், அதற்கான தங்களை தயார் படுத்திக்கொள்ள தெரிவதில்லை. எனவே, ஆர்முள்ள இளைஞர்களுக்கு நானே இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். இது ஒரு சிறு தொண்டு அவ்வளவு தான்’’ என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP