முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மாவின் அஸ்தி கங்கையில் கரைப்பு!

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அஸ்தி இன்று கங்கையில் கரைக்கப்பட்டது.
 | 

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மாவின் அஸ்தி கங்கையில் கரைப்பு!

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அஸ்தி இன்று கங்கையில் கரைக்கப்பட்டது. 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் (ஆக.6) மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள சுஷ்மா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் பாஜக அலுவலகத்திற்கு சுஷ்மாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்சி தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து டெல்லியில் உள்ள லோதி மயானத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் மற்றும் அவரது மகள்  ஹப்பூரில் உள்ள கங்கையில் சுஷ்மாவின் அஸ்தியை கரைத்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP