முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் காலாமானார். அவருக்கு வயது 93
 | 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் காலாமானார். அவருக்கு வயது 93.

உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமாகி வந்ததாக மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர் எய்ம்ஸ் மருத்துமனைக்கு சென்று வாஜ்பாய் குறித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி மாலை 5.05க்கு மறைந்தார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த நிலையில், காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சியில் பிரதமராக ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடித்த முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். 25-12-1924 அன்று பிறந்த இவர் 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராடி பொது வாழ்வில் நுழைந்தார்.

லக்னோ தொகுதி எம்.பி.யாக 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆண்டுகளில் தொடர்ந்து ஐந்து முறை இவர் வெற்றி பெற்றுள்ளார். மெரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார் வாஜ்பாய். 2004-ம் ஆண்டுக்குப் பிறகு வயது மூப்பு காரணமாகவும் உடல்நலக் குறைவு காரணமாகவும் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வு பெற்றுவந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP