எளிமையாக தனது சொந்த ஊருக்கு சென்ற முன்னாள் கடற்படை தளபதி!

இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா ஓய்வு பெற்ற 2 மணி நேரத்தில் தன்னுடைய மனைவியுடன் தனது காரில் தனது தனது சொந்த ஊரான பஞ்சகுலாவுக்கு சென்றார்.
 | 

எளிமையாக தனது சொந்த ஊருக்கு சென்ற முன்னாள் கடற்படை தளபதி!

இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா ஓய்வு பெற்ற 2 மணி நேரத்தில் தன்னுடைய மனைவியுடன் தனது காரில் தனது சொந்த ஊரான பஞ்சகுலாவுக்கு சென்றார்.

இந்திய கடற்படை தளபதியாக இருந்தவர் அட்மிரல் சுனில் லம்பா. இந்திய கடற்படையில் 40 ஆண்டுகள் சேவை செய்த பின் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தளபதி கரம்பீர் சிங்கின் பதிவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சுனில் லம்பா தனது பொறுப்பகளை அவரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் மிகவும் எளிமையாக தன்னுடைய காரில் மனைவியுடன் அவர் தனது சொந்த ஊரான சண்டிகர் அருகே உள்ள பஞ்சகுலாவுக்கு சென்றார்.

இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், 40 ஆண்டு காலம் கடற்படையில் எனக்கு கொடுக்கப்பட்ட பணியினை திறம்பட செய்தேன் என்று எண்ணுகிறேன். தற்போது எனது அடுத்த கட்ட காலத்தை எதிர்நோக்கி எனது சொந்த ஊருக்கு செல்கிறேன் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP