முன்னாள் அமைச்சர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை! 100 கோடி ரூபாய் அபராதம்

மகாராஷ்டிர மாநிலத்தில் வீட்டு வசதித்துறையில் செய்த முறைகேட்டில் அம்மாநில முன்னாள் அமைச்சர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

முன்னாள் அமைச்சர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை! 100 கோடி ரூபாய் அபராதம்

மகாராஷ்டிர மாநிலத்தில் வீட்டு வசதித்துறையில் செய்த முறைகேட்டில் அம்மாநில முன்னாள் அமைச்சர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் ஜல்கான் என்ற பகுதியில் வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக 'வீட்டுவசதி திட்டம்' ஒன்று தொடங்கப்பட்டது. அப்போது வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த சுரேஷ் ஜெயின் மற்றும் சிலர் இதில் 29 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக 2006ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 2012ஆம் ஆண்டு சுரேஷ் ஜெயின் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையானார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையில், சுரேஷ் ஜெயின் உள்ளிட்ட 48 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

அதன்படி, சுரேஷ் ஜெயினுக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்றொரு முன்னாள் அமைச்சரான குலாப்ராவ் தியோகருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ஜெயின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஆவார். 

மேலும், இதில் பல அரசு அதிகாரிகளும், குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP