முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இன்று டெல்லி(கிழக்கு) தொகுதியில் வேட்புமனுத்தாக்கல்!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பில், மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதை அடுத்து, இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்.
 | 

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இன்று டெல்லி(கிழக்கு) தொகுதியில் வேட்புமனுத்தாக்கல்!

பாஜக சார்பில், மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தற்போது இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர், 2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். மேலும், ஐபிஎல் போட்டிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணியில் விளையாடியுள்ளார். 

சமீபத்தில், இவர் பிரதமர் மோடியை சந்தித்ததுடன், பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கைகள் தனக்கு பிடித்துள்ளதாகவும், பாஜக மூலமாக மக்களுக்கு சேவை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து, அவருக்கு மக்களவைத் தேர்தலில் டெல்லி(கிழக்கு) பகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லி கிழக்கு பகுதியில் திறந்த வேனில் சாலையோரத்தில் பிரச்சாரம் செய்துகொண்டே சென்றுள்ளார். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP