மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.பி முன்னாள் முதல்வரை நலம் விசாரித்த இந்நாள் முதல்வர்!

மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல் நாத் இன்று மருத்துவமனையில் பாபுலால் கவுரை நேரில் சென்று பார்த்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்தும் விசாரித்து அறிந்தார்.
 | 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.பி முன்னாள் முதல்வரை நலம் விசாரித்த இந்நாள் முதல்வர்!

மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பாபுலால் கவுர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் நர்மதா மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல் நாத் இன்று மருத்துவமனையில் பாபுலால் கவுரை நேரில் சென்று பார்த்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்தும் விசாரித்து அறிந்தார். 

பாபுலால் கவுர் கடந்த ஆகஸ்ட் 2004 முதல் நவம்பர் 2005ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும், போபாலில் உள்ள கோவிந்தபுரா தொகுதியில் இருந்து 10 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP