கர்தார்பூரை தொடர்ந்து, நங்கனா சாஹிப்பும் இந்திய மக்களுக்காக திறக்கப்படும் - ஆதித்யநாத் திட்டவட்டம்!!

உத்திரப்பிரதேசம் : சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூர் வழித்தடத்தை தொடர்ந்து, அவர்களின் முதல் குருவின் பிறப்பிடமான நங்கனா சாஹிப்பும் இந்தியர்களுக்காக திறக்கப்படும் என்ற திட்டவட்டமான கருத்தை முன் வைத்துள்ளார் அம்மாநில முதலமைச்சரான யோகி ஆதித்யாநாத்.
 | 

சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தனது இறுதி நாட்களை கர்தார்பூரில் கழித்ததாக கூறப்படுவதை தொடர்ந்து, சீக்கியர்கள் கர்தார்பூரை புனித தலமாகவே கருதி வருகிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க கர்தார்பூர் வழித்தடம் கடந்த நவம்பர் 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று குருநானக் தேவ்வின் 550வது பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய உத்திரப்பிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத், சீக்கிய மதத்தை தோற்றுவித்து உலகிற்கு ஒளி அளித்த குருநானக் தேவ்விற்கு தனது நன்றியை தெரிவித்ததோடு, கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தை தொடர்ந்து, சீக்கியர்கள் தங்களது குருவாக வழிபடும் குருநானக்கின் பிறப்பிடமான நங்கனா சாஹிப்பும் இந்தியர்களுக்காக நிச்சயமாக ஓர் நாள் திறக்கப்படும் என்று தனது திட்டவட்டமான கருத்தையும் முன் வைத்துள்ளார். 

மேலும், சீக்கியர்கள் தொடர்பான அனைத்து புனித தலங்களும் அழகுபடுத்தப்பட்டு, அனைத்து மக்களும் வர விரும்பும் சுற்றுலா தலங்களாக மாற்றியமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார் யோகி ஆதித்யநாத். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP