ஆந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

டெல்லி - விசாகப்பட்டினம் இடையே செயல்படும் ஆந்திர விரைவு ரயிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 | 

ஆந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

ஆந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

டெல்லி - விசாகப்பட்டினம் இடையே  செயல்படும் ஆந்திர விரைவு ரயிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ஆந்திரப்பிரதேசம் அதிவிரைவு ரயில் இன்று குவாலியரின் பிர்லா நகர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ரயிலின் 'B5' ஏ.சி பெட்டியில் தீ பிடித்தது. தொடர்ந்து அடுத்த பெட்டிக்கும் தீ பரவ ஆரம்பித்தது. உடனடியாக அந்த பெட்டியில் இருந்த பயணிகள் 'எமர்ஜென்சி' கம்பியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பயணிகளும் வேகமாக இறங்கினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் வந்து அனைத்து பயணிகளையும் இறக்கி விட்டனர். 

பயணிகள் வேகமாக செயல்பட்டதால் பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது வரை 4 பெட்டிகளில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பயணிகளை பத்திரமாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP