டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; 6 பேர் பலி

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
 | 

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; 6 பேர் பலி

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். 

டெல்லியில் ஜாகீர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். மேலும், 11 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP