உயரதிகாரி மீது பெண் விமானி பாலியல் புகார்

தமது உயரதிகாரி மீது மூத்த பெண் விமானி அளித்துள்ள பாலியல் புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏர் இந்தியா விமான சேவையின் டெல்லி பிரிவில் பணிபுரியும் மூத்த பெண் விமானி ஒருவர், தமது உயரதிகாரி மீது இப்புகாரை தெரிவித்துள்ளார்.
 | 

உயரதிகாரி மீது பெண் விமானி பாலியல் புகார்

தமது உயரதிகாரி மீது மூத்த பெண் விமானி அளித்துள்ள பாலியல் புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான சேவையின் டெல்லி பிரிவில் பணிபுரியும் மூத்த பெண் விமானி ஒருவர், தமது உயரதிகாரி மீது இப்புகாரை தெரிவித்துள்ளார். அதில், " பணி தொடர்பான பயிற்சியை அளித்துவரும் எனது உயரதிகாரி,  தினமும் பயிற்சி முடித்து எனது அறைக்கு திரும்பியதும், மொபைல்ஃபோனில் தொடர்ந்து குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) அனுப்பி குறும்பு செய்து கொண்டிருந்தார். அவரின் எஸ்எம்எஸ்-க்கு பதிலளிக்கவில்லை என்றால், அறைக்கு வந்து எனக்கு மிரட்டல் விடுத்தார்.

அலுவல் முடிந்து வீடு திரும்பும்போது, காரில் தம்முடன் திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார். இது தமக்கு சங்கடத்தையும், ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியது. அத்துடன், வீடு திரும்பிய பிறகும் எஸ்எம்எஸ் -இல் உயரதிகாரியின் தொந்தரவு தொடர்ந்தது" என தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

மூத்த பெண் விமானியின் இந்தப் புகார் குறித்து, ஏர் இந்தியா நிர்வாகம்  உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP