நெடுஞ்சாலை திட்டங்களில் மத்திய அரசு சாதனை!-  நாடெங்கிலும் 35,000 கிமீ சாலை போக்குவரத்து

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடு முழுவதிலும் 33,000 கிமீ என கடந்த நான்கரை ஆண்டுகளில் அமைத்து சாதனைப் படித்துள்ளது. இது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்திடாத காரியமாகும்.
 | 

நெடுஞ்சாலை திட்டங்களில் மத்திய அரசு சாதனை!-  நாடெங்கிலும் 35,000 கிமீ சாலை போக்குவரத்து

சாலை போக்குவரத்து என்பது நாட்டின் வளர்சிக்கு முதல் படி. அதனை நன்கு உணர்ந்த ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடு முழுவதிலும் 33,000 கிமீ என கடந்த நான்கரை ஆண்டுகளில் அமைத்து சாதனைப் படித்துள்ளது. இது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்திடாத காரியமாகும். 

2008 ஆண்டு முதல்  2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் அரசு செய்யத் தவறியதை தற்போதைய ஆட்சியில் சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்து காட்டியுள்ளார். நாடு முழுவதும் வெறும் சொரப்ப ஆண்டுகளில் 33,361 கிமீ சாலை போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் ஆட்சியில் 2014ஆம் ஆண்டு வரை நாள் ஒன்றுக்கு 11.7 கிமீ தூரம் மட்டுமே போடப்பட்ட சாலைகள், தற்போதைய ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 27 கிமீ என சாலைகள் போடப்பட்டுள்ளன. 2017-18 ஆண்டுகளில் 17,055 கிமீ சாலைகள் போடப்பட்டது. தற்போது அதனைக் காட்டிலும் அதிக தூரத்தை அடையும் வகையில் 2018-19 ஆண்டுகளில் 20,000 கிமீ சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது.  அதாவது, இந்த ஆண்டு ஒரு நாளைக்கு 45 கி.மீ. என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதிலும் மேலாக, சுங்க வரி என்றப் பெயரில் தங்களது சொத்து மற்றும் வங்கி கணக்கு மதிப்பை உயர்த்திக் கொண்டே சென்ற தனியார் முதலீட்டாளர்களின் கனவுகள் சிதைந்தன. இதனால் பொதுமக்கள் பணத்தை கொல்லை அடித்து பழகியவர்கள் இந்த சாதனையை மூடி மறைக்க முயற்சித்து வருகின்றனர். 

நெடுஞ்சாலை திட்டங்களில் மத்திய அரசு சாதனை!-  நாடெங்கிலும் 35,000 கிமீ சாலை போக்குவரத்து

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, சாலை போக்குவரத்து திட்டங்களை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி வருகிறது. வருடாந்திர அளவில் திட்டமிடப்பட்டுள்ள சாலை போக்குவரத்து திட்டம் அரசு மற்றும் தனியார் கொட்டு முயற்சியில் நிறைவேற்றப்பட உள்ளது. அதில் நாற்பது சதவீத செலவை மத்திய அரசு ஏற்கின்றது.  மேலும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளது மற்றும் முடக்கப்பட்டிருந்த ஒரு நேர நிதி முதலீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

நடப்பு ஆண்டில் (2018-19) தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 20,000 கிமீட்டர் தூரத்துக்கு பணிகள் வழங்க சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.  2017-18 ல் அமைச்சகத்தால் 8,652 கிலோ மீட்டர் என்.ஹெச்.ஏ.ஐ மூலம் 7,397 கிலோ மீட்டர் என்.ஹெச்.ஐ.டி.சி.எல். மூலம் 1,006 என மொத்தம்  பணி அளிக்கப்பட்ட 17,055 கிலோ மீட்டரைவிட இது 25 சதவீதம் அதிகமாகும்.

2018-19 க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 16,420 கி.மீ. தூர சாலை அமைப்பில் 9,700 கி.மீ. சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தாலும் 6,000 கி.மீ. என்.ஹெச்.ஏ.ஐ. மூலமும் 720 கி.மீ. என்.ஹெச்.ஐ.டி.சி.எல் மூலமும் அமைக்கப்படும். 2017-18 ல் 9,829 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. 

நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்து வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP