Logo

விவசாயிகளுக்கான உர மானியம் 20% அதிகரிக்க மத்திய அரசு முடிவு!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான மானியத்தை 20% வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
 | 

விவசாயிகளுக்கான உர மானியம் 20% அதிகரிக்க மத்திய அரசு முடிவு!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான மானியத்தை 20% வரை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், உர மானியத்திற்காக ரூ.22,875 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதேபோல், சிட் பண்ட் முதலீடுகளை முறைப்படுத்த புதிய மசோதா கொண்டு வரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்படுகிறது.

மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30 ஆக உள்ள நிலையில் கூடுதலாக 3 நீதிபதிகளை நியமிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP