நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்!

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 2019 - 20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
 | 

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்!

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 2019 - 20 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2019- 20 ஆம் ஆண்டுக்கான  இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்.1 ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் பியூஸ்கோயலால் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. 

புதிய மத்திய நிதியமைச்சராக தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீத்தாராமன் முதல் பெண் நிதியமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து 2019- 20 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அவர், நேற்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடரில், காலை 11 மணியளவில் 2019- 20 ஆம் ஆண்டுக்கான முழு பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார். இது இவருடை முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP