விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உட்பட 51 தொகுதிகளில் இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
 | 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உட்பட 51 தொகுதிகளில் இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 5ம் கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 12 தொகுதிகளிலும், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதிகளிலும், ஜார்கண்டில் 4 தொகுதிகளிலும், காஷ்மீரில் 2 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெற்று வரும் தேர்தலில் 675 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 12 சதவீத பேர் பெண் வேட்பாளர்கள். இந்த தொகுதிகளில் மொத்தம் 8¾ கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். காலை முதலே மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். 

அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கும், பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.

லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சத்ருகன் சின்கா மனைவி பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர்களில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை இந்த தேர்தல் நிர்ணயிக்க உள்ளது.

தேர்தலையொட்டி 96 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP