வல்லபாய் பட்டேல் ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள்: மோடி

வல்லபாய் பட்டேல் ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள்: மோடி
 | 

வல்லபாய் பட்டேல் ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள்: மோடி

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேரு - காந்தி குடும்ப ஆட்சியில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆட்சியில் இருந்திருக்காது என கூறினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மாண்ட்சவுர் பகுதியில் நடைபெற்ற ஒரு பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மக்களிடம் போலி வாக்குறுதிகளை அளிப்பதாக குற்றம்சாட்டினார். 2014ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி மக்களிடம் போலி வாக்குறுதிகளை கொடுத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியதற்கு பதிலடி கொடுக்குமாறு மோடி பேசினார். 

மேலும், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத், இஸ்லாமியர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என பேசிய ஒரு வீடியோவை பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை குறி வைத்து காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்வது ஜனநாயகத்திற்கு மிகப் பெரும் அவமானம் எனக் கூறியுள்ளார். மேலும், ராகுல் காந்தியை அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

"காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடக்கும் அரசுகளில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் நாட்டில் விவசாயிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி எங்கள் மீது பழி போடுகிறது. ஆனால், கடந்த 55 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராக இருந்திருந்தால் விவசாயிகளின் வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும்" என்று மோடி கூறினார்.

மேலும், சோனியா காந்தியின் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கி வந்த காங்கிரஸ் அரசு, விவசாயிகளுக்கு 15-16 சதவீத வட்டியில் கடன் அளித்ததாகவும், பாரதிய ஜனதா அரசு வட்டியில்லாமல் கடன் அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார். கடந்த ஆண்டு மாண்ட்சவுர் பகுதியில் விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP