டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் போராட்டம்!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 | 

தொடர்ந்து அவர்கள், நாடாளுமன்றத்தை நோக்கி இன்று மாபெரும் பேரணியை தொடங்கியுள்ளனர்.  இப்பேரணியில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இப்பேரணியில் கலந்து கொண்டனர். அவர்கள் மேல்சட்டை அணியாமல், அரைநிர்வாணத்துடன் கைகளில் மண்டை ஓடு, எலும்புத்துண்டுகளை ஏந்தியப்படி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP