விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்- குடியரசுத்தலைவர் உறுதி!

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்றைய அவரின் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.
 | 

விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்- குடியரசுத்தலைவர் உறுதி!

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை ஒன்றுகூட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது. நாட்டு மக்கள் தற்போதைய அரசின் பணிகளை மதிப்பீடு செய்து அதன் பிறகே புதிய அரசை வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெரும்பான்னையுடன் தேர்வு செய்துள்ளார்கள்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதுதான் அரசின் நோக்கம்.

நடந்து முடிந்த தேர்தலில் 61 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்து, புதிய சாதனை படைத்துள்ளார்கள். மேலும் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பாதி பேர் முதல் முறையாக எம்பிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

மேலும் அனைவருக்கும் வளர்ச்சி என்பதோடு, அனைவரது நம்பிக்கையையும் பெறவேண்டும் என்பதே அரசின் நோக்கம். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது.

நாட்டின் நகர்ப்புற பகுதிகள் மட்டுமின்றி, ஊரகப் பகுதிகளும் சேர்ந்தே வளர்ச்சியடைய வேண்டும். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரின் 17ஆவது நாடாளுமன்ற உரையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP