விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம் நீட்டிப்பு...17.5 கோடி பேருக்கு பயன்! 

சிறு, குறு விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியுதவி திட்டத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 14.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்
 | 

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம் நீட்டிப்பு...17.5 கோடி பேருக்கு பயன்! 

சிறு, குறு விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியுதவி திட்டத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐந்து ஏக்கர் வரையில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, கூடுதல் வருமானம் கிடைத்திடும் வகையில், அவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று தவணையாக ரூ.6,000 நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

தற்போது,  2  ஹெக்டேர் வரை வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் இதில் சேர்ந்து பயன்பெறும் வகையில் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 14.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என, மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP