போலி இணையதளம் - 2 பேர் கைது

அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

போலி இணையதளம் - 2 பேர் கைது

அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்து வந்த 2 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். 

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ள அமேசான் நிறுவன் ஆன்லைன் மூலம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதனிடையே, அமேசான் நிறுவனம் பெயரில் போலி இணையதளம் தொடங்கி விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் போலி இணைதளம் தொடங்கி விற்பனை செய்து வந்த 2 பேரை உ.பி. சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்கள், புரோட்டின் பவுடர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP