ஜே.இ.இ., தேர்வில் தோல்வி: 17 வயது மாணவன் தற்கொலை

தெலுங்கானாவில், ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த, 17 வயது மாணவன், துபாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 | 

ஜே.இ.இ., தேர்வில் தோல்வி: 17 வயது மாணவன் தற்கொலை

தெலுங்கானாவில், ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த, 17 வயது மாணவன், துபாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், பொறியில் படிப்பில் சேர்வதற்காக ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், 12 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு ஜே.இ.இ., தேர்வு எழுதினர். 

இந்நிலையில், ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், தோல்வி அடைந்த அதிர்ச்சி தாங்க முடியாத, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, 17 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த வாரம், இந்த மாநிலத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், தோல்வி அடைந்த அதிர்ச்சியில், மாநிலத்தின் பல பகுதிகளை சேர்ந்த, 19 மாணவ, மாணவியர் தற்கொலை செய்த நிலையில், தற்போது மேலும் ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது, அங்கு வசிக்கும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP