நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு?

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதால், நடைபெற்று வரும் கூட்டத்தொடரின் காலம் நீட்டிக்கப்படலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக நாடாளுமன்ற எம்.பிக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். 

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, "பாஜக உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பிரச்னைகளுக்காக பணியாற்ற வேண்டும். தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

எம்.பிக்கள், மனிதாபிமானத்துடன் மக்கள் பிரச்னைகளை அணுக வேண்டும். அதேபோன்று விலங்குகள் நலப்பிரச்னைகளிலும் எம்.பி.க்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், நடைபெற்று வரும் நாடளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதால், கூட்டத்தொடர் காலம் நீட்டிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP