அயோத்தியா வழக்கின் விசாரணை நாளை முடிவடையும் என எதிர்பார்ப்பு!!

அயோத்தியா வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மேற்கொண்டிருந்த விசாரணை இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், நாளையும் தொடரும் என செய்திகள் கூறுகின்றன.
 | 

அயோத்தியா வழக்கின் விசாரணை நாளை முடிவடையும் என எதிர்பார்ப்பு!!

அயோத்தியா வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மேற்கொண்டிருந்த விசாரணை இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், நாளையும் தொடரும் என செய்திகள் கூறுகின்றன.

அயோத்தியா வழக்கில், அனைத்து தரப்பினரின் சார்பான இறுதி விசாரணை நடைபெற்று கொண்டிருப்பதை தொடர்ந்து, அக்டோபர் 15 அன்று விசாரணை முடிவடையும் என தலைமை நீதிபதி ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், இன்றுடன் முடிவடைய இருந்த விசாரணை நாளையும் தொடரும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வழக்கிற்கான விசாரணை முடிவடைய உள்ள நிலையில், வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பாதுகாப்பு அடிப்படையில் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை நாளை முடிவடைந்து, வரும் நவம்பர் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்திரப்பிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரமான அயோத்தியாவில் உள்ள ராமஜன்ம பூமி, விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமரது பிறப்பிடமாக இந்து இன மக்களால் நம்பப்படுகிறது. 

இந்த ராமஜன்ம பூமியை இடித்துவிட்டு, மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர், முஸ்லீம்களின் வழிபாட்டு தலமான பாப்ரி மஸ்ஜித் என்னும் மசூதியை எழுப்பியதாகவும், பின்பு ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் இரு இனத்தவரும் வழிபடும் வகையில், ராமஜன்ம பூமியை மாற்றி அமைத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இதை தொடர்ந்து, கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓர் சர்ச்சையினால், அன்றிலிருந்து இன்றுவரை, இந்து முஸ்லீம், இருதரப்பினரும், அயோத்தியாவின் ராமஜன்ம பூமி தங்களுக்கு சொந்தமானது என கூறி வருகின்றனர்.

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP