"மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்" - சுஷ்மாவிற்கு மத்திய அமைச்சரவையின் இரங்கல் கூட்டம்!

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 | 

"மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்" - சுஷ்மாவிற்கு மத்திய அமைச்சரவையின் இரங்கல் கூட்டம்!

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மறைந்த மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் இன்று டெல்லியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ். அவரது பேச்சு திறமை மற்றும் நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் அனைத்தும் எந்நாளும் நினைவு கூறப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், "நாட்டு மக்கள் அனைவராலும் அவர் என்றும் நினைவு கூறப்படுவார். இந்தியர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து அந்நாட்டு மக்கள் மனதிலும் இடம் பெற்றுள்ளார். எனவே, அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய பணிகளும், சேவைகளும் என்றும் மறையாது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் என்ற பத்திரிக்கையை கடந்த 2014 ஆம் ஆண்டு 'அதிகம் விரும்பப்படும் இந்திய தலைவர்' என்ற பட்டத்தை அவருக்கு அளித்தது மிகப்பொருத்தமானது. அவரது மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP