மோடியின் இந்தியாவில் இவிஎம் இயந்திரத்துக்கு தனி சக்தி உண்டு : ராகுல் கிண்டல்

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஓட்டுப்பதிவு முடிந்த பின், இவிஎம் இயந்திரங்களை கண்காணிக்கும்படி, கட்சியினரை ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார். மோடியின் இந்தியாவில் இவிஎம் இயந்திரத்துக்கு தனி சக்தி உண்டு என்றும் அவர் கிண்டல் செய்துள்ளார்.
 | 

மோடியின் இந்தியாவில் இவிஎம் இயந்திரத்துக்கு தனி சக்தி உண்டு : ராகுல் கிண்டல்

2 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு முடிந்தபின், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுவதை கண்காணிக்கும்படி, கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியின் இந்தியாவில் இயந்திரங்களுக்கு சக்தி இருப்பதாக கிண்டல் செய்தள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியை எழுப்பி வருகின்றன. இந்நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே, கட்சித் தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். 

 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “மத்தியப் பிரதேசத்தில் தேர்தலுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வித்தியாசமான முறையில் கையாளப்பட்டன. சில பேருந்துகளில் திருடப்பட்டன, இரண்டு நாட்கள் மறைத்து வைக்கப்பட்டன. சில கைதவறிச் சென்று பின்னர் அவை ஓட்டல்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோடியின் இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தனி சக்தியுள்ளது. எச்சரிக்கையாக இருங்கள்" என தொண்டர்களை ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார். 

நவம்பர் 28-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற பின்னர் 48 மணி நேரங்கள் கழித்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக வெளியான செய்தியை குறிப்பிட்டு ராகுல் ட்வீட் செய்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP