பெட்ரோலுக்கு பதிலாக எத்தனால்: நிதின் கட்கரி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசலுக்காக மாற்றாக மெத்தனால், எத்தனால் போன்ற எரிப்பொருள்களின் பயன்பாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.
 | 

பெட்ரோலுக்கு பதிலாக எத்தனால்: நிதின் கட்கரி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மெத்தனால், எத்தனால் போன்ற எரிபொருள்களின் பயன்பாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று  மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக, டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இந்தியா 7 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்தினால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

எனவே,  பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் நாம் நம் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இதற்கு, விவசாய விளைப்பொருள்களின் கழிவுகளிலிருந்து கிடைக்கும் எத்தனால், மெத்தனால் போன்ற எரிபொருள்களையும், சூரிய மின்சக்தி பேட்டரிகளையும் பொதுப் போக்குவரத்தில் பரவலாக்க நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம், எரிபொருள் தேவையில் நாம் தன்னிறைவு அடைவதுடன், கிராமப்புற பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.
வரும் 2022 -க்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP