வருமான வரியை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், வருமான வரியை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும், என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
 | 

வருமான வரியை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், வருமான வரியை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும், என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நாட்டில் வருமான வரி செலுத்துவது பெரும்பாலும் நடுத்தர மக்கள் மட்டுமே, என கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த, வருமான வரியை ஒழிப்பதே  மிக சிறந்த நடவடிக்கையாக இருக்கும், என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், வருமான வரியை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதே முதல் நடவடிக்கைகளுள் ஒன்றாக இருக்க வேண்டும். நாட்டு மக்களில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வருமான வரி கட்டுவதில்லை. ஏழைகள் வருமான வரி கட்டுவதில்லை. பெரும் பணக்காரர்கள் பட்டைய கணக்காளளை வைத்து சிறிய அளவே வருமான வரி செலுத்தி வருகின்றனர். இதனால், நடுத்தர மக்களும், உழைக்கும் வர்க்கமுமே வருமான வரியை கட்டி வருகின்றனர். இது நடுத்தர மக்களை துன்புறுத்துவது போன்ற செயலாகும்" என்று கூறினார்.

மேலும், "சர்வதேச அளவில், இந்திய பொருளாதாரம் சீனா அமெரிக்காவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. நாம் தொடர்ந்து 7% சதவீத வளர்ச்சியை பார்த்து வருகிறோம். ஆனால் அது போதாது. 10 சதவீதம் அல்லது அதற்கு மேல் வளர்ச்சி இருக்க வேண்டும். அதற்கு வருமான வரியை ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் வழிவகுக்கும்" என்றார்.

இது குறித்து ஏற்கனவே நமது தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்... அதை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP