டெல்லியில் பாஜக பொதுச்செயலாளர்களின் அவசர சந்திப்பு! காரணம் அறிய பலரும் ஆர்வம்!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு கட்சி தலைமையகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
 | 

டெல்லியில் பாஜக பொதுச்செயலாளர்களின் அவசர சந்திப்பு! காரணம் அறிய பலரும் ஆர்வம்!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு கட்சி தலைமையகத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

பாஜக எம்.பிக்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. இன்று இந்த பயிற்சி முகாம் முடிவடைந்தவுடன், கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாளை ஜம்மு-காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான பொறுப்பாளர்களுடனான சந்திப்புக்கும் அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த நாடளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரு அவைகளிலும் வரும் 5ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவரும் சட்டப்பிரவுகள் 35ஏ மற்றும் 370 ஆகிய பிரிவுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே பல்வேறு நிலையிலான கூட்டங்களை நடத்தி தங்கள் கட்சியின் ஊழியர்களையும், தலைவர்களையும் அதற்குத் தயாராக இருக்குமாறு பாரதிய ஜனதா கட்சி அறிவுறுத்தி வருவதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்ம ீர் எல்லைப்பகுதியும் பெரும் பதட்டத்துடன் உள்ளதாக அந்த மாநிலத்திலிருந்து வரும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP