சோனியா காந்தி வீட்டில் அவசரக் கூட்டம்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய பணிக்குழுவின் அவசரக் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

சோனியா காந்தி வீட்டில் அவசரக் கூட்டம்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய பணிக்குழுவின் அவசரக் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் சமீபத்தில் ஏற்பட்ட மழை காரணமாக சந்தித்து வரும் பிரச்னைகள்  தொடர்பாக நேற்று தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து உரையாடியதாக தகவல்கள் வெளிவந்தன. அதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியுடன் கலந்துரையாடல் நடத்தினர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பணிக்குழுவின் அவசரக் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி, சிவசேனாவின் உதவியுடன் ஆட்சியமைக்க விரும்பி வரும் நிலையில் அதற்கு சரத் பவார் வெளிப்படையாக அவருடைய ஒப்புதலை அளிக்காத நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வரலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP