"சூதாட்டத்தின் மீதான தடையை நீக்குக"

விளையாட்டுப் போட்டிகளை மையமாக கொண்டு நடத்தப்படும் சூதாட்டங்களின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என மத்திய சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
 | 

"சூதாட்டத்தின் மீதான தடையை நீக்குக"

விளையாட்டுப் போட்டிகளை மையமாக கொண்டு நடத்தப்படும் சூதாட்டங்களின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என மத்திய சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

உலகம் முழுவதும், விளையாட்டு போட்டிகளின் மீது, ஆர்வலர்கள் பெட்டிங் செய்து சூதாடுவது வழக்கம். பல வளர்ந்த நாடுகளில் இது சகஜம் என்றாலும், சிறிய நாடுகளில் கூட, சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டு செயல்படுவதுண்டு. ஆனால் இந்தியாவில் விளையாட்டு போட்டிகளின் மீது சூதாடுவது இன்றும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் போட்டிகளில், மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் போன்ற சர்ச்சைகளுக்கு இடையே, சூதாட்டத்தை தடுக்க விளையாட்டுத் துறைகள் போதுமான நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. இதனால் சமூக விரோதிகள் பலர் சட்டவிரோதமாக, விளையாட்டுப் போட்டிகளை மையமாக கொண்டு சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தாவூத் இப்ராஹிமின் கூட்டம், இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பல ஆயிரம் கோடிகள் சுழலும் இந்த கிரிக்கெட் பெட்டிங்கால் பல சாமானியர்கள் பாதிக்கப்படுவதுண்டு. தங்களாலும் வெல்ல முடியும் என நினைத்து பெட்டிங் செய்பவர்கள், மேட்ச் பிக்சிங் போன்ற செயல்களில் ஈடுபடுவோரிடம் தோற்று விடுகின்றனர். 

ஆனால், சூதாட்டத்தை தடை செய்தாலும், அது சமூக விரோதிகளால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டி, அதை சட்டபூர்வமாக்க பலர் வலியுறுத்தி வருகின்றனர். சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டால், அதில் புழங்கும் பணம் குறித்து வெளிப்படைத் தன்மை வரும்; அதில் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறையும்; சூதாட்டத்தால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும், என்பது போன்ற காரணங்களை அவர்கள் கூறுவதுண்டு. 

இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள சட்ட கமிஷன், தற்போது சட்டவிரோதமாக பெரிய அளவில் நடந்து வரும் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்றும், அதை நடத்த தகுதி பெற்ற நிறுவனங்களுக்கு அரசே உரிமம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள், தங்களது ஆதார் எண், போன்றவற்றை இணைத்தால், இதில் சமூக விரோதிகளின் பங்கு குறையும் என்றும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே சூதாட்டத்திலும் ஈடுபட முடியும் என்று விதிகளை கொண்டு வரலாம் என்றும் கூறியுள்ளது. இதற்காக சட்டப் பிரிவு 249 மற்றும் 252ன் படி, பொதுநலத்தை மையமாக கொண்டு நாடாளுமன்றம் இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றலாம் என சட்ட கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. 

சட்ட கமிஷனின் இந்த பரிந்துரைக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP