தேர்தலையொட்டி பேஸ்புக், டிக்-டாக் போன்ற சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடு

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதை பேஸ்புக்,வாட்ஸ் அஃப், டிக்-டாக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
 | 

தேர்தலையொட்டி பேஸ்புக், டிக்-டாக் போன்ற சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடு

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பேஸ்புக்,வாட்ஸ் அஃப், டுவிட்டர் , டிக்-டாக் போன்ற சமூக வலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதை அந்நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகளை 3 மணி நேரத்தில் நீக்கிவிடுவதாக பேஸ்புக், வாட்ஸ் அஃப், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

முன்னதாக, தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், ஷேர் சாட், கூகுள், டிக்-டாக் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP